அத்தியாவசிய பாவனை பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கிழைக்கும் புகையிலை மீதான வரி மிகவும் குறைவாகவே உள்ளதாக புகைத்தலுக்கு எதிரான சமூக அமைப்புகள் அரசாங்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளன.
மது மற்றும் போதை வஸ்து தகவல் நிலையமான எடிக் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் நாட்டின் புகையிலை தொழில்துறை தேசிய வருமானத்திற்கு எவ்வித பங்களி ப்பையும் அளிக்கவில்லை என்பதை அறிந்துள்ளது.
இவ்வமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் குமுது சுமனசேகர 2000ம் ஆண்டில் புகையிலை மீது 10.6 வீத வரியும் 2012 இல் அந்த வரி 6.1 சதவீதமாக குறைக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் மக்களுக்கு தீங்கிழைக்கும் புகையிலை நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செல்வதாகவும் கூறினார்.
புற்றுநோய் பராமரிப்பு சங்கம் ஜீவக மன்றத்துடன் இணைந்து மே மாதம் 31ம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் புகையிலை பற்றிய விளம்பரங்களையும் அவற்றுக்கு அனுசரணை அளிக்கும் செயற்பாடுகளையும் முற்றாக தடை செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சியொன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
புற்று நோய் பராமரிப்பு சங்கத்தின் தலைவர் டாக்டர் சமாதி விஸ்வநாத் ராஜபக்ஷ இந்நிகழ்வில் உரையாற்றும்போது, வாயில் ஏற்படும் புற்று நோயினால் நாளாந்தம் மூவர் இலங்கையில் மரணிக்கிறார்கள் என்றும் புகையிலை மூலமே புற்றுநோய் விஸ்வரூபம் எடுத்து வருவதாகவும் கூறினார். பீ
புற்று நோயினால் மக்கள் இறப்பதை சமநிலை படுத்துவதற்காக இந்த புகையிலை நிறுவனங்கள் இளைஞர்கள் மத்தியில் புகைக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/03/?fn=n13060310 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.