இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரினால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானமே மிஞ்சியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த 6 ஆவது ஐ.பி.எல். தொடரில் எழுந்துள்ள ஸ்பொட் பிக்ஸிங் சூதாட்டச் சர்ச்சைகள் குறிதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.பி.எல். தொடரில் "பிக்ஸிங்' நடந்ததை அறிந்து அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், இம்மாதிரியான சம்பவங்கள், துவக்கத்தில் இருந்தே நடந்து கொண்டுள்ளன. இத் தொடரால் ஊழல் அதிகரிக்கும் என, ஐ.சி.சி. யின் ஊழல் தடுப்பு அதிகாரி பால் கான்டன் கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே எச்சரித்தார். அவர் சொன்னது போலவே, ஒவ்வொரு ஆண்டும் "பிக்சிங்', போதை என, ஏதாவது ஒன்று நடக்கத்தான் செய்கிறது.
ஐ.பி.எல். தொடரால், இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.
பணம் காரணமாக அனைவரும் இதில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். இது ஒவ்வொரு வீரர்களின் கவனத்தை சிதறடித்து, பேராசைக்காரர்களாக மாற்றியுள்ளது. இதிலிருந்து, உலகத்தரம் வாய்ந்த எந்த வீரரும் உருவானதாக தெரியவில்லை. கவாஸ்கர், சச்சின், டிராவிட் போன்ற வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் சபையின் உள்ளூர் கட்டமைப்பே சிறப்பாகத்தான் உள்ளது. இதுவே, நல்ல வீரரை உருவாக்க போதுமானது என்ற நிலையில், இத்தொடருக்கு என்ன தேவை வந்தது என்றே தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.(மூலம்: http://www.virakesari.lk/article/sports.php?vid=696 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.