......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

ஜனாதிபதிக்கு ரணில் கடிதம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் தீர்க்கப்படவேண்டிய நான்கு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுத்தியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1.    அரசியலமைப்பிற்குள் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தை இரத்து செய்தல்,பதிலாக 17 ஆவது திருத்தத்தை மீளக்கொண்டுவருதல். 2.    கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பொலிஸ் ஆணைக்குழுவை பலப்படுத்தும் வகையில் மேலதிக ஏற்பாட்டை சேர்த்துக்கொள்ளல். 3.    இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநருக்கு பதிலாக சிவிலியன் ஒருவரை நியமித்தல். 4.     வடக்கு தேர்தலை கண்காணிக்க பொதுநலவாயத்திலிருந்து கண்காணிப்பாளர்களை கொண்டுவருதல். போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றே அக்கடித்தத்தில் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவரினால் கடந்த புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டதாகவும் பதிலெதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70715-2013-06-13-11-33-38.html#sthash.QRkpuk5b.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE