......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 June 2013

'மேர்வினின் இணைப்பு செயலாளரிடம் வாஸ் பணம் வாங்கினார்'

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, பொது உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின்
இணைப்பு செயலாளரிடமிருந்து பணம் பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி போன்றவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவதற்காக இணைப்பு செயலாளர் சிங்கபூர் சரத்திடமிருந்து இந்த பிரதி பொலிஸ்மா அதிபர் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்படவேண்டிய போதைப்பொருள் வியாபாரிகள் பட்டியலில் அவரது பெயரும் இருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சிங்கபூர் சரத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதுடன் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71203-2013-06-17-10-47-42.html#sthash.VsCX0lw3.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE