கிளிநொச்சி, கொக்காவில் இராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
கொக்காவில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸாரிடம் இவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதவான் உத்தரவுக்கிணங்க தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வைத்தியர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய நீதவான் என்.கணேசராசாவினால் விடுதலை செய்யப்பட்டார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/71225-2013-06-17-12-41-35.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.