......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 23 June 2013

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்கு இன்று நியமிக்கப்பட்டுள்ளது. 19 அங்கத்தவர்களை கொண்ட இந்த தெரிவுக்குழுவுக்கு அமைச்சரும் சபைமுதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தலைவராவார்.

இந்தக்குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், மைதிரிபால சிறிசேன, அநுரபிரியதர்சன யாப்பா, தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, ரிஷாட் பதூர்தீன், சம்பிக்கரணவக்க,விமல் வீரவங்ச, பஷில் ராஜபக்ஷ, லக்ஷ்மன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜனக்க பண்டார ஆகியோரே அங்கம் வகிக்கின்றனர்.

இந்த அறிவிப்பை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று விடுத்தார். 

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இந்த குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தெரிவு செய்யும் என்றும் இது தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டார் என்றும் அவர் சொன்னார்.


(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71787-2013-06-21-09-28-16.html#sthash.eSIWwvrd.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE