......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 23 June 2013

13ஐ பற்றி இந்தியா அறிவிக்கவில்லை: ஜனாதிபதி

ஊடக ஒழுக்ககோவையை அரசாங்கம் தயாரிப்பதற்கு பதிலாக ஊடகவியலாளர்களே தமக்கான ஒழுக்க கோவை தயாரிப்பதற்கு இடமளிக்கபோவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் தலைவர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒழுக்ககோவையை பற்றி கலந்துரையாடலை நடத்திவிட்டு அதனை மேம்படுத்த முடியுமென்றும் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்ற ஊடக ஒழுக்ககோவையை சர்வதேச ஊடகங்களும் மனித உரிமை நிறுவனங்களும் கடுமையாக விமர்சித்திருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புதுடில்லிக்கு சென்றதன் பின்னர் 13 ஆவது திருத்தம் பற்றி இந்திய அரசாங்கம் தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென்றும் பத்திரிகைகளிலேயே செய்திகளை தான் பார்த்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை தொடர்பாக மக்களின் அபிபிராயத்தை அரசாங்கம் அறியவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூதாட்ட நிலையங்களுக்கும் மதுபான நிலையங்களுக்கும் அரசாங்கம் புதிய அனுமதிகளை வழங்குவதில்லை என தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பரவலாகவுள்ள சூதாட்ட நிலையங்களை ஓரிடத்திற்கு கொண்டுவரவிரும்புவதாகவும் அவர் கூறினார்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71827-13-.html#sthash.YJ3xd8jy.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE