......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 23 June 2013

இலங்கையிடம் வற்புறுத்த பொதுநலவாயம் நல்ல வாய்ப்பு: பிரித்தானியா

பிரச்சினைகள் காணப்படும் விடயங்களில் தீர்க்கமான முன்னேற்றத்தை காண்பதற்கு இலங்கையிடம் வற்புறுத்துவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்குமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
'உயர்ஸ்தானிகரை கேளுங்கள்'என்ற நிகழ்வின்போது பிரித்தானிய அரசாங்கம் ஏன்? இந்த மாநாட்டை பகிஸ்கரிக்கவில்லையென கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரத்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றன்கின், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு என்ற விடயங்களில் தீர்க்கமான முன்னேற்றத்தை காணுமாறு இலங்கையிடம் வலியுறுத்துவதற்கு பொதுநலவாய உச்சிமாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார். பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டுவிட்டது என்றும் ஜோன் றன்கின் தெரிவித்தார். பொதுநலவாயத்தை மிக முக்கியமான விடயமாக பிரித்தானியா கருதுகின்றது. இதனால் பிரதமர் டேவிட் கமருன் இந்த கூட்டத்துக்கு வருவதாக முன்னரே கூறிவிட்டார். பொதுநலவாயத்தின் விழுமியங்களான ஜனநாயகம், அபிவிருத்தி,மனித உரிமைகள்,நீதி,சட்டத்தின் ஆட்சி என்பவற்றின் மீதான அதன் உறுதிப்பாட்டை இலங்கை வெளிப்படுத்துமென பிரித்தானியா அரசாங்கம் எதிர்;பார்ப்பதாக ஜோன் றன்கின் மேலும் கூறினார்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71799-2013-06-21-10-29-11.html#sthash.LHJ1XYJq.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE