13வது திருத்தம் இந்தியாவுக்கோ வைகோவுக்கோ, ஜெயலலிதாவுக்கோ தேவையான வகையில் அமுலாக்கப்படாதென்றும் அமைச்சர் தெரிவித்தார். மாத்தளை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் நிமல் ஜயவர்தனவின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டில் வேலை பெற்ற நூற் றுக்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியல் யாப்பே இங்கு காணப்பட வேண்டும். அது நாட்டக்கும் நாட்டு மக்க ளுக்குமாகத் திருத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.
மாகாண சபை முறையில் பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றி பரிசீலிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. அது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் சகல தீர்மானங்களும் நாட்டு மக்களின் இறைமைக்கு தலைசாய்த்து மேற்கொள் ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/17/?fn=n1306178 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.