......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

சிங்கள ராவய ஊர்வலத்தை தடுத்து நிறுத்துக: அசாத் சாலி ஜனாதிபதியிடம் கோரிக்கை

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார்.

ஊர்வலமாக வந்த குறித்த அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு தங்காலை பிரதேசத்தில் ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி குறித்த அமைப்பினர் , அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், எந்த விதமான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மாத்தறை, கந்தர என்னும் இடத்தில் முஸ்லிம் புகைப்படப் பிடிப்பாளர் ஒருவரை தாக்கிய இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள், அவரிடம் இருந்து புகைப்படக் கருவியை பறித்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மாடுகள் அறுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரி ஒரு பௌத்த மதகுரு கண்டியில் தீக்குளித்ததை அடுத்தே சிங்கள ராவய அமைப்பினரின் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன.

இதற்கிடையே இந்த அமைப்பினர் ஊர்வலமாக வருகின்ற வீதிகளில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்கள் தமது கடைகளை மூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5383 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE