......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

20 மாதங்களின் பின்னர் சபைக்கு வந்த துமிந்த

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 20 மாதங்களின் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் சமூகமளித்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த துமிந்த சில்வா எம். பி. பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காதிருப்பதற்கான விடுமுறையை ஆளும் கட்சி சபையில் நீடித்து வந்ததுடன் அதற்கு சபையின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது.
இந்நிலையில் பூரணகுணமடைந்த துமிந்த சில்வா எம். பி. நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
துமிந்த சில்வா எம். பி.யின் வருகையின் போது பாராளுமன்ற வீதியில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் துமிந்தவின் புகைப்படம் தாங்கிய பதாதைகளை தாங்கி ஆதரவுப் போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இதன் போது பாராளுமன்ற வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை நேற்று சபையின் எதிர்க்கட்சிகளின் ஆசனப்பகுதியின் பின்வரிசையில் அமர்ந்திருந்த துமிந்த எம். பி. யை ஐ. தே. க. எம்.பியான புத்திக்க பத்திரன அருகில் சென்று பேசினார்.

இதன் பின்னர் துமிந்த சில்வா எம். பி. ஆளும் கட்சியின் பக்கமாக சென்று நாமல் ராஜபக்ஷ எம். பியின் ஆசனத்தில் அமர்ந்து அஸ்வர் எம். பி.யுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5384 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE