......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 June 2013

மனைவிக்கு கையிலும் காலிலும் சூடு வைத்த கணவர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளிக்கம்பை தேவர் கிராமத்தில் தனது மனைவிக்கு நெருப்பினால் சுட்டு அவரது கையிலும் காலிலும் காயம் ஏற்படுத்திய நபரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் அக்கரைப்பற்று அளிக்கம்பை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி. சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடந்த வியாழக்கிழமை கணவர் மனைவி இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது கணவன் அடுப்பில் கிடந்த நெருப்பு கொள்ளியை எடுத்து மனைவியின் கால் கை என்பவற்றில் சூடு வைத்து காயம் ஏற்படுத்தியுள்ளார் இவ்விடயம் பொலிஸாருக்கு தெரிய வந்ததையடுத்து பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கணவரை கைது செய்து மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார். இவரின் மூத்த பிள்ளைக்கு 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5307 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE