......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 June 2013

தமிழ் பேசும் மக்களின் குரல் வலுக்க வேண்டும்: சுமந்திரன்

-எம்.சி.அன்சார்
 
தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னமும் பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து, தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
 
தேசிய ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
 
இன்றைய போர்ச் சுழல் இல்லாத, ஆயுதங்கள் களையப்பட்ட சுழலில் மீண்டும் தமிழ் பேசுகின்ற மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து பழைய குரோதங்களை மறந்து சகோதர்களாக பயணிக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்ற விடயத்தில் கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் விருப்பப்படியே நடைபெறும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாகவுள்ளது.
 
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் வந்து குடியேற வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரண ஆதரவினை வழங்கும்.
 
அரசாங்கம் 13ஆம் திருத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டில் மக்கள் பல பகுதிகளிலும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 
அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்போர் இது தொடர்பில் குரல் எழுப்பிவருகின்றமை வரவேற்கத் தக்கதாகும் என்றார்.
 
இக்கூட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, நவ சிஹல உறுமய கட்சி தலைவர் சரத் மனமேந்திர, எக்சத் லங்கா ஜனதா கட்சி தலைவர் சோமசிறி அப்புஆராய்ச்சி, கல்முனை வர்த்தக சங்க முக்கியஸ்தர் கே.எம்.ஹாதிம், டாக்டர் வை.எல்.எம்.யூசுப் ஆகியோரும் உரையாற்றினர்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/72945-2013-06-29-16-10-28.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE