......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 June 2013

இந்தியாவின் தலையீட்டால் இலங்கையின் முயற்சி தடைப்பட்டுள்ளது: ஹரிகரன்

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற  முயற்சிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே தாமதமடைந்துவருகின்றது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தது.

இந்நிலையில்  இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின்படியான உரிமைகளை வடமாகாணசபை பெற்றுவிடுவதைத் தடுப்பதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அப்படியான முயற்சிகளில் இலங்கை ஈடுபடும்போது இந்தியாவினால் மீண்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஹரிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னதாக அப்படியான திருத்தங்களை கொண்டுவர இலங்கை முயற்சிக்காது என்றும் அப்படி கொண்டுவந்தால் அந்த மாநாட்டுக்கு இந்தியா செல்வது கேள்விக்குறியாகலாம் என்றும் அவர் கூறினார்.

அதனால் இந்தியா தன்மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தாது. இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அழுத்தங்களை காங்கிரஸ் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72949-2013-06-30-01-22-45.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE