......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 June 2013

சரியான செய்திகளை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்: சட்டமா அதிபர்

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.எம்.ஹுசைன்

சரியான முறையில் செய்திகளை வழங்கி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்  18ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கொண்டார். இங்கு தொடர்ந்துரையாற்றிய சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ,

"அழிவுக்கு வழிவகுக்காமல் அவர்கள் பணி உயரியதாக அமைய வேண்டும். ஆக்கப் பணிகளே அவசியம். சரியான முறையில் செய்திகளை வழங்கி மக்களின் நம்பிக்கை யைப் பெற வேண்டும். மொழி, சமூகம் மற்றும் மதம் என்ற வேறுபாடு களை களைந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். அத்துடன் தேசிய ஒற்றுமைக்கும் மத ஒற்றுமைக்கும் நாட்டின் மேம்பாட்டுக்கும் நாம் பாடுபட வேண்டும்.

நாம் மும்மொழிகளையும் படிக்க வேண்டும். மொழிகளை நாம் படிக்காமையினால் தான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை நாட்டின் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும்.பேனையில் இருந்து எழுத்து வெளிப்பட்டு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டால் அது முக்கியம் பெற்று விடுகிறது. அதன் தாக்கங்கள் பலவகைப்பட்டதாக அமையும். நன்மைகளும் விளையலாம். அழிவுகளுக்கும் வழிகள் கோரலாம்" என்றார்.

போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இந்த மாநாடு நேற்று சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட் டலில்  நடைபெற்றது. இதில் பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி சிறப்புரையாற்றினார்.

அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளஸி, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், எஸ்.சரவணபவன், ஹுனைஸ் பாருக் மற்றும் முத்தலிப் பாருக் உட்பட பலர்  இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.

இதன் எட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்களும் நேற்று தெரிவுசெய்யப்பட்டனர்.

இதில் போரத்தின் தலைவராக என்.எம்.அமீனும் பொதுச் செயலாளராக றிப்தி அலியும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாளருக்கான தேர்தலில் 18 மேலதிக வாக்குகளினால்; எச்.எம்..பாயிஸ் தெரிவுசெய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர்கள் 15 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 23 பேர் போட்டியிட்டனர்.

இதில் எம்.பி.எம்.பைறூஸ், எம்.எப்.றிபாஸ், எஸ்.ஏ.கே.பழீலுர் றஹ்மான், கலைவாதிகலீல், றசீத் எம். ஹபீழ், எஸ்.எம்.எம்.முஸ்த்தபா, ஹில்மி மொஹமட், அஹமட் முனவ்வர், இர்ஷாத் ஏ காதர், தாஹா முஸ்ம்மில், அஸ்கர் கான், எம்.ஏ.எம்.நிலாம், யூ.எல்.எம்.றியாஸ், ஜாவித் முனவ்வர், திருமதி மும்தாஜ் சரூக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக எப்.எம்.பைரூஸ், சாதிக் ஷிஹான் மற்றும் புர்கான் பீ இப்திகார் ஆகியோர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72959-2013-06-30-04-22-24.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE