......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 June 2013

ஹிந்தி இசை: இலங்கை கிரிக்கெட் அதிருப்தி

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழாவில் இலங்கை வீரர்களை அறிமுகப்படுத்தும்போது பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டமை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று லண்டனில் ஆரம்பமானது. இதன்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக அந்தந்த நாடுகளின் இசை வடிவங்களே ஒலிபரப்பப்பட்டன. ஆனால், இலங்கை வீரர்களை அறிமுகப்படுத்தும்போது பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டது.

இதுதொடர்பில் ஐசிசி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தாங்கள் கடிதம் எழுதி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிசாந்த ரணதுங்க டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

'ஒலிபரப்பப்பட்ட இசை ஹிந்தி மொழியில் இருந்தது. நமது கலாசாரத்தை பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கவில்லை. இதனால் நமது வீரர்களும் பார்வையளர்களும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். இது தொடர்பில் ஐசிசி  நிறைவேற்று அதிகாரியிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம்' என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் கூறுகையில், 'வீரர்களை அறிமுகப்படுத்தும் போது, பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டது. அதேநேரம், மற்ற நாடுகளின் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர்களுடைய நாடுகளின் இசை வடிவங்களே ஒலிபரப்பப்பட்டன'  என்றார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69997-2013-06-07-11-54-27.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE