வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் 30 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.
இது தங்களின் மனப்பூர்வமான முடிவு எனவும் தாங்கள் இருவரும் இணைந்தே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் லுட்மிலா தெரிவித்தார். நீங்கள் இதனை நாகரீகமான விவாகரத்து எனக் கூறமுடியும் எனவும் அவர் கூறினார்.
நாட்டின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள எனது கணவர் தேசத்தின் விவகாரங்களில் முழுக்கவனம் செலுத்த வேண்டியுள்ளதாலேயே தாங்கள் இருவரும் இந்த முடிவை எடுத்ததாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் லுட்மிலா தெரிவித்தார்.
தங்களுக்கு வயது வந்த இரு பெண் பிள்ளைகள் உள்ளனர் எனவும் தங்களது குடும்பம் மிகவும் ஒற்றுமையாகவே உள்ளது எனவும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/69971-2013-06-07-09-13-28.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.