பொதுநலவாய மாநாட்டிற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ள பிரிட்டனிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விமான என்ஜின்களையும் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விமான உதிரிப்பாகங்களையும் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.
இது குறித்து இதுவரையில் அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு பதில் கூறவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ராஜகிரியவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-
இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகள் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கின்ற நிலையில் பொது நலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டது. இந்நிலையில் அரசாங்கம் பிரித்தானியாவின் மனதைப் குளிரப்படுத்த அந்நாட்டிடமிருந்து விமான என்ஜின்களையும் ஏனைய உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்ய நடவடிக்கையினை மிகவும் இரகசியமாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதனால் நாட்டிற்கு ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளை யார் ஈடு செய்வார்கள். அரசின் பொருளாதார கொள்கை இந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5499 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.