......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மாற்றப்பட்டே ஆகவேண்டும் - கெஹெலிய ரம்புக்வெல

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டேயாகவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ள அமைச்சர், வருடங்கள் பல கடந்த நிலையிலும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மாற்றமெதுவுமின்றி இருந்து வருவது ஆச்சரியம் தரக்கூடியதெனவும் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;-

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் மாகாணங்களை இணைத்தல் குறித்த விடயங்கள் உள்ளிட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள உறுப்புரைகள் மீதான பொதுவிவாதமொன்று நாட்டில் தற்போது இடம்பெற்றுவருகிறது. இது மாற்றப்பட்டேயாகவேண்டும். அதிலுள்ள சில உறுப்புரைகள் (ஷரத்துக்கள்) மாறியே தீரவேண்டும் என்றார். அரசியலமைப்பில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவென தனக்கு உரிமையெதுவும் கிடையாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்து கொண்டதன் விளைவாலேயே பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் சில மாற்றங்களை முன்மொழிவதற்கென பாராளுமன்றத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5497 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE