உலகத்தமிழ் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் பேரவை மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஜூன் 22 முதல் ஜூன் 30ஆம் திகதி வரை எட்டு நாள் பயணமாக மோட்டார் சைக்கிள்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் ஆரம்பமான இந்த பிரச்சார நடவடிக்கை காஞ்சிபுரம், செய்யாறு, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியகுமாரி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாக திரும்பவும் சென்னை வந்தடைய உள்ளது.
ஒற்றை ஆட்சி முறையில் இன அழிப்பு புரியும் அரசோடு ஈழத் தமிழர்கள் இனியும் இணைந்து வாழ முடியாது, அவர்களுக்கு நீதி வேண்டும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலக நாடுகள் சபையால் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைப் பொருட்களை தமிழ் மண்ணில் விற்கவோ-வாங்கவோ கூடாது என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5507 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.