......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 27 May 2013
வீரர்களை தெரிவுசெய்ய தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய யாழ்.விஜயம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து துடுப்பாட்ட வீரர்களைத் தெரிவு செய்யும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்களை இரு அணிகளாகப் பிரித்து, அர்ஜுன ரணதுங்க அணி என்ற பெயரில் ஒரு அணியும், அரவிந்த டி சில்வா அணியென்ற பெயரில் மற்றைய அணியும் 50 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட போட்டியொன்றில் நேற்று சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் விளையாடின.
இந்நிலையிலேயே இப்போட்டியில் சிறப்பாகச் செயற்படும் வீரர்களை தெரிவு செய்வதற்காக சனத் ஜயசூரிய நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.