......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 27 May 2013

இந்திரரத்ன தேரரின் உயிர் தியாகத்தின் பின்னராவது ஆட்சியாளர்களின் கண்கள் திறக்கட்டும்: ஹெல உறுமய

இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டுமென்றும், மத மாற்றத்திற்கு எதிராக தடை விதிக்க வேண்டுமென்ற கொள்கையை வலியுறுத்தியே போவத்தே இந்திரரத்ன தேரர் தனது உயிரை தியாகம் செய்தார்.
இனிமேலாவது ஆட்சியாளர்களின் கண்கள் திறக்கட்டும் என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.

மறைந்த தேரரின் இறுதிக் கிரியைகளை ‘கொழும்பில்’ நடத்தப்படுவதை தடுத்த ‘அரசியல் சக்தி’ எதுவென்றும் ஹெல உறுமய கேள்வியெழுப்பியது.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் பிரியதர்ஷன தேரர் தற்கொலை என்பது கொடூரமான எண்ணங்களின் வெளிப்பாடாகும்.

ஆனால் இந்திரரத்னதேரர் தலதா மாளிகை, நாட்டில் இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடை செய்ய வேண்டும். மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான பிரேரணைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

முஸ்லிம் பயங்கரவாதத்தை நாட்டில் இல்லாதொழித்து சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

பௌத்தத்தை இல்லாதொழிக்கும் தேசிய சர்வமத அமைப்புக்கள் ஒழியட்டும் என்ற பிரார்த்தனைகளோடே இந்திரரத்ன தேரர் தனது உயிரை தியாகம் செய்தார்.

ஆனால் சிலர் இத்தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

பௌத்த நாட்டுக் கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்த தேரருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் தமது வீடுகளில் மஞ்சள் கொடியை பறக்க விட வேண்டும்.

அத்தோடு நாட்டின் பிரதான இடங்களில் அஞ்சலி பதாதைகளும் காட்சிக்கு வைக்கப்பட வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=4832 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE