கடந்த புதன்கிழமை இடம் பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் வீடியோ முன் தோன்றிய கென்ய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அடபொலஜோவின் நண்பன் நுசைபா கடந்த வெள்ளிக்கிழமை பி. பி. சி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது நண்பனை பிரிட்டன் உளவுப் பிரிவு விலைக்கு வாங்க அடிக்கடி முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் என்னிடம் கெஞ்சுகிறார்கள். அவர்கள் என்னை நிம்மதியாக விடுவதில்லை” என்று எனது நண்பன் கூறினான் என நுசைர் கூறினார்.
நுசைர் பி. பி. சி க்கு பேட்டி அளித்ததைத் தொடர்ந்து அவர் கடந்த சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லாந்து யாட் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இராணுவ வீரரை கொடூரமான முறையில் கொன்ற குற்றச்சாட்டில் 28 வயது அடபொலஜோ மற்றும் 22 வயது அடபொவலே ஆகியோர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் மூவரை கைது செய்ததாக பொலிஸார் சனிக்கிழமை அறிவித்தனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான 162 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கி துவேஷ வார்த்தைப் பிரயோகங்களும், முஸ்லிம் பெண்களின் முக்காடு அங்கிகளை பிடித்து இழுத்தல் போன்ற சம்பவங்களும் இவற்றில் அடங்குகின்றன.
சமூக இணைய தளங்களில் இனத்துவேஷ வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படுத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படை வீரர்களின் கொலை தொடர்பில் பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/27/?fn=w1305275 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.