குரக்கன் மாவினால் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளை சாப்பிட முற்பட்ட மாணவர்களின் பற்கள் கழன்று விழுந்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குரக்கன் ரொட்டியை சாப்பிட முற்பட்ட மாணவர்கள் இருவரின் பற்களே கழன்று வீழ்ந்துள்ளன.
குறித்த பாடசாலையில் பகலுணவு தயாரிப்பதற்கென பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்பிரகாரம் நேற்றைய தினத்திற்கான பகலுணவாக குரக்கன் ரொட்டி வழங்கப்பட்டது.
குரக்கன் ரொட்டிகள் கடிக்க முடியாதளவு கடினமாக இருந்ததால் ரொட்டித்துண்டொன்றை கடித்து இழுக்க முற்பட்டபோதே மாணவர்கள் இருவரின் பற்கள் சில விழுந்துள்ளன.
இது தொடர்பாக உணவு தயாரித்த பெற்றோருக்கு அறிவித்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/60199-2013-03-07-07-31-57.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.