......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 7 March 2013

ஹலால் சான்று வழங்க ஜம்இய்யத்துல் உலமாவுக்கு உரிமையில்லை: ஹெல உறுமய

ஹலால் சான்று வழங்குவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குர்ஆனின் அடிப்படையிலோ அல்லது நுகர்வோர் விவகார அதிகாரசபையிலிருந்தோ அனுமதி பெற்றிருக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கூறியது.

இலங்கையில் தீவிரமாகி வரும் ஹலால் சர்ச்சை காரணமாக சந்தையில் 20 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.

"அல் குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான சூரா அல் - பகராவின் 173ஆவது வசனத்தில் இஸ்லாமிய உணவு வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன. இதில் இறந்த மிருகங்கள், இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாவுக்காகன்றி வேறு யாருக்கும் படைக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டுமென கூறப்படுகின்றது.

இதற்கு மேலாக ஹலால் என்றோ ஹறாம் என்று உணவுகள் வகைப்படுத்தப்படவில்லை. ஆயினும் நிலைமைகளைக் நிர்பந்திக்கும் போது தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளை நுகர அனுமதிக்கும்  அளவுக்கு குர்ஆன் வாக்கியங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளன" என அவர் கூறினார்.

"இலங்கையில் மட்டுமே இஸ்லாமிய இறையியலாளர்களின் குழு ஒன்று ஹலால் சான்றுகளை வழங்குகிறது என அவர் கூறினார். சூரா அல் பக்ராவின் 174ஆவது வசனத்திற்கு அமைய இறையியலாள்ரகள் பணத்துக்காக சான்று பத்திரங்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையும் ஹலால் சான்று வழங்கும் அதிகாரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு இல்லையென கூறியுள்ளது" என அமைச்சர் கூறினார்.

"சமூகத்துக்கான தொண்டு சேவையூடாக எவரும் சமூக நலன் செயல்களில் ஈடுபடலாம். ஆனால், நியமங்களை நிர்ணயிக்கவும் சான்று பத்திரங்களை வழங்கவும் என அமைப்புகளை நிறுவுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஸ்ரீலங்கா நியமங்கள் நிறுவனம் அல்லது நுகர்வோர் அதிகார சபை என்பவை தவிர வேறு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ இவ்வாறு செய்ய சட்ட அதிகாரம் இல்லை.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம்களுக்கு சமய அல்லது சமுதாய தலைமைத்துவம் வழங்கவென நாடாளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்டது. இந்த சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகார எல்லையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மீறிவிட்டது என்பது வெளிப்படையானது" என அவர் கூறினார். 

குர்ஆன் கற்பித்தப்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செயற்படுகின்றது என நிரூபிக்கும்படி ஜாதிக ஹெல உறுமய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக்கு சவால் விடுத்துள்ளது. நீண்ட காலமாக ஏமாற்றி வருகின்றது எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியது.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60203-2013-03-07-07-59-39.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE