......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

மீள் குடியேற்றத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை: வட மாகாண அபிவிருத்தியை சீரழிக்க சிலர் முயற்சி

* பிரிவினைவாதத்தினூடாக அரசியலைத் தக்கவைக்க சதி
* வன்னி மாவட்டத்தில் கடமையாற்ற வருவோருக்கு தவறான தகவல்கள்

வன்னி மாவட்டத்துக்கு கடமையாற்ற வரும் வெளி மாவட்ட அதிகாரிகளுக்கு சில அதிகாரிகள் பிழையான தகவல்களை வழங்கி வருவதினால் இம் மாவட்டத்தில் வாழும் மக்கள் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடுவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அடம்பன் பிரதேசத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது : சுத்தமான குடிநீர் திட்டத்தை ஆரம் பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பாராட்ட வேண்டும்.
இனவாத சிந்தனைகளை கடந்து மனித நேயத்துடன் அவரது பணிகள் இடம்பெறுவதையிட்டு வன்னி மாவட்ட மக்கள் மகிழ்ச்சிகொள்ள வேண்டும். வன்னி மாவட்டத்தின் புதிய வரலாறு எழுதப்படுகின்ற போது அதில் ஜனாதிபதி யினதும், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வினதும் பெயர்கள் நிச்சயமாக பொறிக்கப் பட வேண்டும். யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி திட்டங்களிலும் இங்குள்ள மக்களை மீள்குடியேற்றுவதிலும் பெரும் பங்கினை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆற்றியுள்ளார்.
இறுதி யுதத்தின் போது இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதிலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதிலும் அன்று மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த எனக்கு உதவியாக இருந்ததுடன் இம்மக்களை அவர்களது பிரதேசத்தில் மிகவும் அவசரமாக மீள்குடியேற்றம் செய்வதில் அக்கறையுடன் செயற்பட்டார் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால் மீள்குடியேற்றத்தில் தடை ஏற்படும் என்ற நிலையேற்பட்ட போது விசேட விமானம் மூலம் கண்ணி வெடி அகற்றும் இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து தருவித்து அப்பணிகளை நிறைவு செய்ய ஊக்கமும் உதவியுமளித் ததை இந்த மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
மெனிக் பார்ம் நலன்புரி நிலையத்தில் இருந்த 3 இலட்சம் தமிழ் மக்களையும் நாங்கள் மீள்குடியேற்றம் செய்தோம். அவர்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுத்தோம். அன்று நான் மீள்குடியேற் றத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தேன். நான் அன்று எண்ணியிருந்தால் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களை யும் முன்னுரிமைப்படுத்தி மீள்குடியேற்ற பணிகளை ஆரம்பித்திருக்க முடியும்.
அதனை செய்யவில்லை. தமிழ் மக்களது மீள்குடியேற்றத்திற்கே முன்னுரிமையளித்து செயற்பட்டேன். இன்று இன்னும் வட மாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற முடியாத நிலை உள்ளது. வடக்கில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களில் மீள்குடியேறவென 35 ஆயிரம் குடும்பங்கள் தயாராக உள்ளனர். சிலர் மீள்குடியேற அச்சம்கொள்ள காரணம் இங்கு மீள்குடியேற வரும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுப்படுவதே.
புத்தளம் மன்னார் பாதை யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி ஊடாக மன்னார் பாதை புகையிரதப் பாதைகள் மற்றும் குளப் புனரமைப்பு மின்சார வசதிகள் என்று வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகளை பட்டியலிட்டுப் போட்டுக் காட்டலாம். இந்த அபிவிருத்தி மூலம் அதிகப்படியான நன்மைகளை வட மாகாண மக்களே அனுபவிக்க போகின்றனர்.
ஆனால் இவற்றை மக்க ளுக்கு நாம் செய்கின்ற போது எமக்கு எதிராக விசமத்தனமான இன ரீதியான பிரசாரங்களை பயங்கரவாதத்திற்கு துணை போன சில அரசியல்வாதிகள் செய்கின் றனர். நாம் நல்லதை செய்தால் அதனை பிழையான நோக்கமாக காண்பித்து ஊடகங் களில் எமக்கு எதிரான பிரசாரங்களை செய்கின்றனர். தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் நெருக்கமாக உறவுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் ஊடுருவி இந்த சமூகத்தினை பிளவுபடுத்தி மீண்டும் இன ரீதியான அழிவுகளுக்கு வித்திடுகின்றரன்.
இன்று சிலர் கடந்த 30 வருட காலம் தங்களுக்கு புலிகள் இழைத்த அநியாயத்தை மறந்துவிட்டனர். அன்று புலிகளின் பின்னால் இருந்தவர்கள் இன்று வந்து இனவாதத்தை கக்குகின்றனர். 22 வரு டங்களுக்கு பின்னர் மீள்குடியேற வரு கின்ற முஸ்லிம்களை ஏதோ புதியவர்கள் மீள் குடியேற்றப்படுகின்றார்கள் என்று பிழையான அறிக்கைகளை விடுத்து வருவதை காண முடிகின்றது. இதனது பிரதான நோக்கம் இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் என்னை அரசிய லில் இருந்து ஓரங்கட்டுவதற்கே என்றார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/05/default.asp?fn=n1303052 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE