......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி: 2ம், 3ம் கட்டப் பணிகள் உரிய காலத்துள் பு+ர்த்தி; சீன அரசாங்கம் உறுதி

* 600 மெகா வோர்;ட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கத் திட்டம்
அமைச்சர் பவித்ரா - சீன தூதுவர் சந்தித்து பேச்சு

நுரைச்சோலை அனல் மின் நிலைய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப்பணிகளை உரிய காலத்தினுள் நிறைவு செய்து 600 மெகா வோர்ட் மின்சாரத்தை இந்தவருடத்தினுள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக சீன தூதுவர் வூ ஜியாங்ஹாம் நேற்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் உறுதியளித்துள்ளார்.
சீனத் தூதுவருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. மின் உற்பத்தித்துறைக்கு சீனா அளித்து வரும் பங்களிப்பு குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் தினூடாக 300 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2ஆம் 3ஆம் கட்டங்களினூடாக மேலும் 600 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ், மேலும் இரு நிலையங்கள் நிர்மாணிக்கப் படுகின்றன.
இந்தப்பணிகளை உரிய தரத்துடன் துரிதமாக பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் கோரினார், இதற்கு சீன தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.
நாடு முழுவதிலுமுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக 3310 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கை அடைவதற்கு மேலும் 600 மெகாவோட் மின்சாரம் இந்த வருடத்தில் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளது.
மின்சாரத்துறையில் தற்பொழுது காணப்படும் நிலைமை குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதோடு மின் உற்பத்தித்துறையின் மேம்பாட்டுக்கு எதிர்காலத்திலும் சீனா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சீன தூதுவர் உறுதி வழங்கினார். டீசல் போன்றே மசகு எண்ணெயினூடாக மின் உற்பத்தி செய்ய வும் பெருமளவு செலவு ஏற்படுவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய திட்டங்களுக்கு சீனா தொடர்ந்து உதவும் என சீன தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின்நிலைய பணிகளை அமைச்சர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். நுரைச் சோலை அனல்மின் நிலையத்தை அரசாங் கம் சீனாவுக்கு விற்கத் தயாராவதாக குற்றச் சாட்டுகள் எழுந்திருந்த நிலையிலே அவர் அங்கு சென்று 2ஆம் 3ஆம் கட்ட பணிகள் குறித்து ஆராய்ந்தார்.
இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சார வசதி வழங்கும் இலக்கை எட்டுவதற்கு மேலும் பல திட்டங்களை மின்சக்தி எரிசக்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது குறித்தும் அமைச்சர் இங்கு நினைவு கூர்ந்தார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/05/default.asp?fn=n1303051 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE