......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Friday, 1 February 2013

காத்தான்குடியில் கலாசார கண்காட்சி ஆரம்பம்


- றப்தான் -
C Ex Day 01 (10)காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையில் இலங்கை முஸ்லிம்களின் பண்டய வரலாற்றைப் பாதுகாத்து பேணும் நோக்கில் காத்தான்குடியில் இக்கலாசார கண்காட்சி நடைபெறுகின்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டாக்டர் ஜெகத்பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வினாயகமூர்த்தி முரளீதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகான சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விஜித் கணுகல,கிழக்கு மாகான கலாசார திணைக்கள அலுவல்கள் பணிப்பாளர் வெலிக்கல உட்பட முக்கியஸ்தர்கள் அதிகாரிகள்,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இன்று காலை ஆரம்பமான இக்கண்காட்சி ஞாயிற்றக்கிழமை மாலை நிறைவு பெறவுள்ளது.
இக்கண்காட்சியினை திறந்து வைத்த பின்னர் அதிதிகள் ஊர்வலமாக கலாசார நிகழ்வகளுடன் ஹிஸ்புல்லா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது கலாசார நிகழ்வகளும் நடைபெற்றன.
C Ex Day 01 (10)C Ex Day 01 (1)C Ex Day 01 (29)C Ex Day 01 (28)C Ex Day 01 (27)C Ex Day 01 (26)C Ex Day 01 (25)C Ex Day 01 (24)C Ex Day 01 (23)C Ex Day 01 (22)C Ex Day 01 (21) C Ex Day 01 (15)C Ex Day 01 (14)C Ex Day 01 (13)C Ex Day 01 (12)C Ex Day 01 (11)C Ex Day 01 (9)C Ex Day 01 (8)C Ex Day 01 (7)C Ex Day 01 (6)C Ex Day 01 (5)C Ex Day 01 (4)C Ex Day 01 (3)C Ex Day 01 (2)



(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE