......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

10ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பம்


10ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மும்பையில் சற்றுமுன் ஆரம்பமாகியது. இம் முறை உலகக் கிண்ண போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.


'ஏ" பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவு, இலங்கை ஆகிய அணிகளும், 'பி" பிரிவில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

'லீக்" மற்றும் நொக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் கிக்ஸ் சுற்றுக்குள் நுழையும்.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா- மேற்கிந்தி தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பகல்- இரவாக நடைபெறும் இப்போட்டி சற்றுமுன் ஆரம்பமாகியது.




(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE