......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 15 January 2013

உயர்நீதிமன்றத்தின் பிரதான வாயில்கள் இழுத்து மூடப்பட்டன

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகதிரிக்கப்பட்டுள்ளதுடன் உயர்நீதிமன்றத்தின் பிரதான வாயில்கள் இரண்டும் இழுத்து மூடப்பட்டுள்ளன.


நீதியரசர்களை இனங்கண்டுக்கொண்டதன் பின்னரே பாதுகாப்பு தரப்பினர் அவர்களை உயர்நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

வாகனத்தில் இருக்கின்ற நீதியரசருக்கு பொலிஸார் மரியாதை செலுத்துவதுடன் அந்த வாகனத்திற்குள் வேறுயாராவது இருக்கின்றனரா? என்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொள்கின்றனர்.

இதேவேளை, சட்டத்தரணிகள் பயணிக்கும் எந்தவொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனினும், அதில் பயணிப்போர் தொடர்பில் கடமையில் இருக்கும் பொலிஸார் கேட்டறிந்து கொள்கின்றனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு ஊடகங்களைச்சேர்ந்த புகைப்படபிடிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE