......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

புதிய நீதியரசரை ஏற்கமாட்டோம்: ஜே.வி.பி

(கெலும் பண்டார)

பிரதம நீதியரசருக்கு எதிரான சட்ட ரீதியற்ற குற்றப்பிரேரணையின் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அந்த புதிய பிரதம நீதியரசரின் நியமனத்தை நாம் ஏற்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.


மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு - ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

"நாட்டின் அரசியலமைப்பை வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கே இருக்கின்றது அந்த  உயர் நீதிமன்றத்திலும் தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் புதிய பிரதம நீதியரசரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சட்ட ரீதியற்றதாகும். இந்த நியமனத்தை எமது கட்சி ஏற்றுக்கொள்ளமாட்டாது. 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நீதித்துறையினை அரசியல் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது" என்றார். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE