......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

விமான எதிர்ப்பு ஏவுகணைக்கான ரவைகள் மீட்பு

-எம்.சீ.சபூர்தீன் 

விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கும் தூர இடங்களை இலக்குவைப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய ஒருதொகை ரவைகள் மிஹிந்தலை, மஹகனந்தராவ வாவிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 


இவைகள் 150 - 300 மீற்றர்வரை சென்று தாக்கக்கூடியது என பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

மஹகனந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதியின் பாலத்திற்கு அருகிலிருந்தே இவைகள் நேற்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டுள்ளன. 

அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 2000க்கும் மேற்பட்ட ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் மாத்திரம் 300 எம்.பீ.எம்.ஜீ. வகை ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆம்  திகதி  எம்.பீ.எம்.ஜீ. வகை ரவைகள் 1192, டீ 56 ரக ரவைகள் 761 மீட்கப்பட்டிருந்தன. இந்த ரவைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE