......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவே திவிநெகுமவை எதிர்த்தோம்: ரங்கா

சிறுபான்மை மக்களின் உரிமைகளை மத்திய அரசில் குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய திவிநெகும சட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தோம் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திவிநெகும (வாழ்வின் எழுச்சி) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி அவர் கூறினார்.

“மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரத்தை குவிப்பதற்கும், சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்குமான சட்டமாக திவிநெகுமவை கருதியதாலேயே இன்றைய வாக்கெடுப்பில் நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். அதுமட்டுமல்லாமல், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் நிதி கையாள்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காத பட்சத்தில் அதனை நாங்கள் எப்பொழுதும் எதிர்ப்போம்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா மேலும் கூறினார்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE