பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையில் 117 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள போதிலும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கையொப்பம் இடவில்லை. அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார். அதன் பின்னர் அவரை பிரதம நீதியரசராக நியமிக்கக்கூடும். என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் தலைமைப்பதவிகளை குடும்ப அங்கத்தவர்களே வகிக்கின்றனர். நீதித்துறை மட்டுமே குடும்ப அங்கத்தவர்களின் கையில் இல்லாது பிரிதொருவரின் கையில் இருக்கின்றது.
நீதித்துறையையும் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமக்கு தேவையானதை வேண்டிய நேரங்களில் செய்துக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி பிரதம நீதியரசராக நியமிக்கக்கூடும். அவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.