By M.D.Lucias
முஸ்லிம் சமூகத்தை கேவலப்படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுவருவதாக முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.

அசாத்சாலியின் காரியாலயத்தில், அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அசாத்சாலி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நேற்றிரவு அநுராதபுரத்தில் இனந்தெரியாத நபர்களால் பள்ளிவாயல் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் அரசாங்கமே உள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. நாட்டில் நீதிக்கும் நேர்மைக்கும் இடமில்லை. காடையர்கள் போன்று செயற்படும் விமல் வீரவன்ச போன்றவர்களுக்கே இந்த நாட்டில் இடமுண்டு. இவர்களையே ஜனாதிபதியும் காப்பாற்றுவார். இவ்வாறான விடயங்களால் ஜனாதிபதியின் இரட்டைமுக செயற்பாடு தெளிவாக விளங்குகின்றது.
மேலும் நாட்டில் ஒரு காலத்தில் நீதிபதிகளின் வீடுகளுக்கு கல்லெறியும் நிலை காணப்பட்டது. தற்போது காலம் கடந்து நீதிபதிகளை சிறைவைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கோல்டன் கீ உறுப்பினர்கள் பிரதம நீதியர் சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஏன் நீதியரசரின் வீட்டுக்கு முன் அமர வேண்டும். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன் சென்று அமர்ந்தால் அவர்களுக்குரிய பணம் கிடைக்கும். அதனை விடுத்து பிரதம நீதியரசரின் வீட்டுக்கு முன்பாக அமர்ந்துகொண்டிருக்கின்றனர்.
தற்போது வடக்கில் உள்ள பாடசாலைகளில் இராணுத்தினர் சிங்களம், கணிதம், விஞ்ஞான பாடங்களை கற்பிக்க போவதாக அறிவித்துள்ளனர். கான்கள் துப்புரவு, மரக்கறி வியாபாரம், பூ மரங்கள் வளர்த்தல் என வேலைகளை செய்து முடித்த இராணுவம் தற்போது கல்வி கற்பிக்கப்போகின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறான செய்பாடுகள் இடம்பெறும் போது மிகவும் கேவலமாக இருக்கின்றது என்றார்.
(virakesari)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.