பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இரண்டு நாள் விவாதத்தில் கலந்துகொள்வது என ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் குற்றப் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி வாக்களிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த குற்றப்பிரேரணை தொடர்பான விவாதத்தை பகிஷ்கரிப்பது என மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. எனினும் இந்த விவாதத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.