......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

ஆஸியிலிருந்து 1500 கறவை பசுக்கள் இன்று இறக்குமதி


போபத்தலாவை பண்ணையில் பராமரிப்பு
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க 1500 ஜேர்சி, பிரீசியன் இன கறவை மாடுகள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இத ற்கான நடவடிக்கையை கால் நடை வள கிராமிய அபிவிருத்தி அமைச்சு மேற் கொண்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிப்பதனூடாக குறைந்த விலையில் மக்களுக்கு பாலை விநியோகம் செய்ய முடியும். இதனால் ஊட்டச்சத்தை அதிகரித்து ஆரோக்கியமுள்ள சமுதாய மொன்றை கட்டியெழுப்புவதே அமைச் சின் நோக்கமாகும்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கையால் அவுஸ்திரேலியாவி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகள் இன்று மாலை 5 மணிக்கு இலங்கை துறைமுகத்தை வந்தடைய உள்ளன. பின்னர் இந்த மாடுகள் மிகவும் பாதுகாப்பாக போபத்தலாவ தேசிய கால்நடை அபி விருத்தி சபையின் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு மாடுகளை பராமரிப்பதற்காக அவுஸ்திரேலிய தொழில் நுட்பத்தினால் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் நன்கு பயிற்றப்பட்ட மேற் பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத் தர்கள் இவற்றை பராமரிப்பர்.
பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுத்து வரும் அனைத்து செயற்பாடுகளும் இலங்கை வரலாற்றில் பல வெற்றிப் பாதைகளை நோக்கி செல்கின்றன. இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE