......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

குற்றப்பிரேரணை விவாதம்; எதிர்க்கட்சிகளின் சமாதான பேச்சுக்கு ஆளுந்தரப்பு கடும் எதிர்ப்பு

-மேனகா மூக்காண்டி 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்தை நடத்தாமல் விடுவதான எதிர்க்கட்சிகளின் சமாதானப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆளுங்கட்சியினர், அக்கோரிக்கையினையும் நிராகரித்துள்ளனர்.  


-வியாழக்கிழமையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள குற்றப்பிரேரணை விவாதம் தொடர்பில் - புதன்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினரின் சமாதானப் பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, குற்றப்பிரேரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்குட்படுத்தி அதனை நிறைவேற்றுவதான உறுதியான தொனியிலேயே கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். 

கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கைச்சாத்திட்டு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்த கடிதத்தை அடுத்து இன்று இந்த கூட்டம் நடத்தப்பட்டது. 

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணி (ஜனநாயக தேசிய முன்னணி) சார்பில் அனுர குமார திஸாநாயக்காவும் கலந்துகொண்டனர். 

ஆளுங்கட்சி உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE