......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 6 January 2013

திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்

எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பா. அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,

திவிநெகும சட்ட மூலம் மாகாண சபைகளுக்கு இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரத்தையும் இல்லாமல் செய்யும் சட்ட மூலமாகும். இச்சட்டமூலம் அமுலுக்கு வந்தால் கோழிக்குஞ்சுக்கு கடன் எடுப்பது என்றாலும் மாகாணசபைக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும். அது நேரடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடமே போய் சேர்ந்து விடும் என்றார்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE