நிந்தவூர் கிட்ஸ் கெம்பஸ் கல்வி நிலையத்தின் 5 வருட பூர்த்தியினை முன்னிட்டு விளையாட்டு விழா ஒன்று வெள்ளிக்கிழமை அல் மதீனா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்வி நிலையத்தின் தலைவர் யூ.எம்.நஜீப் (பொறியியலாளர்) தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.தாஹிர் பிரதித் தவிசாளர் ஏ.எல்.எம்.அன்ஸார் மற்றும் பிரதேச கல்வி அதிகாரி எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதீதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகள் மூலம் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகள் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பைசல் காசிம் எம்.பி.; மாணவர்களின் உடல்இ உள வளர்ச்சிக்கு சிறு வயது முதல் கல்வி செயல்பாட்டுக்கு அப்பால் அவர்களை இணைப்பாட விதான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியம் எனக் கூறினார்.
இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவித்து மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டி வருகின்ற கல்லூரி பணிப்பாளர்களின் சேவைகள் பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 5 வருடங்களாக சிறந்த நிருவாக கட்டமைப்பின் கீழ் இஇஸ்லாமிய சூழலில் நிந்தவூர் கிட்ஸ் கெம்பஸ் கல்வி நிலையம் திறம்பட இயங்கி வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் பைசல் காசிம் எம்.பி தெரிவித்தார்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.