சட்டக்கல்லூரி அனுமதி பரிட்சைக்கு தோற்றிய மாணவர்கள், தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இவ்வாண்டுக்கான சட்டக்கல்லூரி அனுமதி பரிட்சை வினாப்பத்திரம் வெளியாகியதாக கூறப்படும் முறைப்பாட்டை விசாரணை செய்ய தவறிய பரீட்சைகள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.
'சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை பற்றிய விசாரணை தொடர்பாக பரீட்சை திணைக்களத்திடம் கேட்டபோது அவர்கள் திருப்தியான பதிலை
தரவில்லை' என சட்டக்கல்லூரி நுழைவு மாணவர்கள் ஒன்றியம் கூறியது.
'நாம் பக்கச்சார்பற்ற ஒரு விசாரணையை எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர்கள் விசாரணைபற்றி எமக்கு இன்னும் அறிவிக்கவில்லை' என ஒன்றியத்தின் பேச்சாளர் றம்ஸி பாஷா கூறினார்.
'சட்டக்கல்லூரி அதிபர் டபிள்யூ.டி. றொட்ரிகோ, விசாரணை மேற்கொள்ளும்படியோ, விடைத்தாள்களுக்கு மீள் புள்ளியிடும்படியோ எம்மிடம் கேட்கவில்லை. அவர் கேட்குமிடத்து அதை செய்ய நாம் ஆவலாக உள்ளோம்' என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.