இது தொடர்பில் ஐ.நா வின் மனித உரிமைகள் தொடர்பிலான ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது,
ரிசானாவை தடுப்பு காவலில் வைத்தமை மற்றும் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தியமை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கை தொடர்பில் செயலாளர் நாயகத்தினால் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரிசானாவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கலக்கமுற்றிருப்பதாகவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஆழ்ந்த கண்டனத்தை செயலாளர் நாயகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிசானாவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் பல முறைப்பாடுகளை செய்திருந்தன. அவருக்கு உரிய வகையில் மொழிப்பெயர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் பலவந்தமாகவே அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதாகவும்
தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவில் 2011 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டமை அதிகரித்திருந்ததாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.