......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி கைச்சாத்து


நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளார். என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவித்தல் கடிதம் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் பேச்சாளர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உடன் அமுலுக்கு வரும்வகையில் பிரதம நீதியரசர் நீக்கம்

"நாடாளுமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அப்பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குவதற்கான தீர்மானத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கைச்சாத்திட்டார்.  

அரசியலமைப்பின் 107(2) பிரிவின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டளையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி செயலகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட உதவிச்செயலாளர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் எடுத்துச்சென்று கையளித்தனர்.
பிரதம நீதியரசரை நீக்குமாறு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு தானும் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்".



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE