......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 13 January 2013

வாகன விபத்தில் கும்பஸ்தர் பலி


-எம்.சி.அன்சார்

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்


சம்மாந்துறை சென்நெல் கிராமம் முதலாம் பிரிவில் வசிக்கும் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை அச்சு முகம்மது அப்துல் கரீம் என்பவரே உயிரிழந்தார்.

அம்பாறையிலிருந்து கல்முனையை நோக்கி வந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதிய போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE