கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அன்றைய தினம் இவ்வைத்தியசாலையில் இடம்பெறவுள்ள வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காகவே அவர் இங்கு விஜயம் செய்யவுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையானது தேசிய உற்பத்தித் திறன் (2010/2011) C தர விருதைப் பெற்றுள்ளதை முன்னிட்டே இவ்வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை பத்து மணியளவில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை மண்டபத்தில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பி.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, பைசால் காஸிம் ஆகியோரும் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவுற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.
கடந்த வருடம் இவ்வைத்தியசாலைக்கு சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் விஜயம் செய்ததுடன் இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தனர்.
(kattandkudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.