......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

சவூதியுடனான உறவுகள் தொடர்ந்தும் நீடிக்கும்


லக்ஷ்மி பரசுராமன்
* புதிய தூதுவர் நியமனம் விரைவில்
* வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு
சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்ந்தும் நீடிக்குமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம தெரிவித்தார்.

இதேவேளை, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஒருபோதும் மூடப்படமாட்டதெனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு பதிலாக இன்னுமொரு தூதுவர் விரைவில் அங்கு நியமிக்கப்படுவாரெனவும் இப்புதிய தூதுவர் குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டமையையடுத்து ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் சவூதிக்கான இலங்கைத் தூதுவர் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE