......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

ஆர்ப்பாட்டத்தை தடுக்க 3,000 படையினர் குவிப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கொழும்பு, கோட்டையினூடாக அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உட்பிரவேசிக்காது தடுப்பதற்காக சுமார் மூவாயிரம் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். 


இராணுவப் படையனிகள் மற்றும் பொலிஸ் படையணிகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேரே இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நீர்ப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், கலகத்தடுப்பு பிரிவு படையினர், கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சுப் படையணி போன்றனவும் குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் மூவாயிரம் பேரடங்கிய வழக்குறைஞர்கள், பொலிஸாரால் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளையும் உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முற்பட்டனர். 

குற்றப்பிரேரணையை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்காகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையை நோக்கிப் புறப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE