வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு:
இதேவேளை, கொழும்பில் பாரிய மூன்று ஹோட்டல்களை அமைப்பதற்கும் தூர இடங்களில் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குமென தற்போது 2 ஆயிரத்து 887 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டில் முதலீடு செய்யப்பட்டி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநா ட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பில் 45 மாடிகளுடனான ஹோட்டல் ஒன்றினை அமைப்பதற்காக 170 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இவொன் ரிசோட் கம்பனியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒசியானிக் டிவலப்மன்ட்டினால் 30 அடுக்கு மாடிகளுடனான ஹோட்டல் நிர்மாணிப்பதற்காக 244 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேலும் இந்து வேர்ஷன் டிவலப்மன்ட் 70 அடுக்கு மாடி களுடனான ஹோட்டலுக்காக 111 மில் லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப் பந்தம் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக அம்பாறை, அநுராதபுரம், பதுளை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, யாழ்ப்பாணம், களுத்துறை, பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங் களில் 233 செயற்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 362 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இச்செயற் திட்டங்களூடாக 15 ஆயிரத்து 377 அறை களை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கு மென தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் பேர வாவியினை அழகு படுத்தும் நோக்கில் அபான்ஸ் நிறுவனம் முதல் கட்டமாக 104 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய் திருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.