கொழும்பிலும் புறநகரின் பல இடங்களிலும் தங்கியிருந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்த தாய்வான்நாட்டு குழுவொன்றைச்சேர்ந்த 100 அங்கத்தவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முயற்;சியாளர்களை பயமுறுத்தி பணம் பறித்துவந்ததாக கூறப்பட்ட தாய்வானைச்சேர்ந்த் 74 ஆண்களும் 26 பெண்களுமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பணம் சலவை செய்வதில் ஈடுபட்டுள்ளமை தமக்கு தெரியும் எனவும் தமக்கு கப்பம் செலுத்தாது விட்டால் தங்களால் முன்னெடுக்கப்படுவதை அம்பலப்படுத்துவோம் எனவும் மிரட்டி பணக்கார வர்த்தகர்களிடம் இவர்கள் பணம் பறித்து வந்துள்ளனர்.
இவர்கள் தொடர்பிலான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் போது,தாய்வான் இரகசிய பொலிஸ் அதிகாரிகளும் சர்வதேச பொலிஸாரின் தாய்வான் கிளை அதிகாரிகளும் பிரசன்னமாய் இருந்தனர்.
சந்தேக நபர்கள் தாய்வானில் கைது செய்யப்பட்டு அவரவர் இழைத்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவர் எனவும் இந்த அதிகாரிகள் நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் செல்வந்தர்களான தொழில் அதிபர்களின் ஈமெயில் விலாசம், வங்கிக்கணக்கு விபரங்கள் என்பனவற்றை கணினியிலிருந்து களவெடுத்து அவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு இந்த குழுவினர் அவர்களை மிரட்டியுள்ளனர்.
தாம் குறிப்பிடும் வங்கிக்கணக்குகளில் பணத்தை வைப்பு செய்யாவிடின் தாங்கள் பணச்சலவை குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவர் எனவும் சந்தேகநபர்கள் மிரட்டியுள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.