......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

கொழும்பு மாநகருக்கு மேலதிகமாக இருபது நகரங்கள் அபிவிருத்தி


* முப்படை, பொலிஸ் உதவியுடன் பணிகள்
* புலம்பெயர் அமைப்புக்கள் வன்முறைகளை

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டு காலம் நிறைவு பெற்றுள்ள இவ்வேளையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் மீண்டும் இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதற்கு முயற்சி செய்வதற்கு இடமளிக்காத வகையில் ஒரு பாரிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாண்டில் அமுலாக்கவு ள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 2013ம் ஆண்டில் கொழும்பு நகரத்திற்கு மேலதிகமாக மேலும் 20 நக ரங்களை அபிவிருத்தி செய்வதற்கு தீர் மானித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இவ்வாண்டில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் ஓரங்கமாகவே இந்த 20 நகரங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம், எஹலியகொட, தியத்தலாவ, இமதூவ, ஊறுபொக்க, கண்டி, நுவரெலியா, நாரம்மல், ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர, அநுராதபுரம், மாத்தறை, தங்கொட்டுவ, பண்டாரவளை, வீரகெட்டிய, ரம்புக்கன, நுகேகொடை, மீகஹகியுல, புளத்சிங்கள, ஹோமாகமை மற்றும் மொறட்டுவை ஆகிய 20 நகரங்கள் இவ்வாண்டில் அபிவிருத்தி செய்யப்படும்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் யோசனை மற்றும் ஆலோசனைக்கு அமைய இந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தேசிய பாதுகாப்புக் கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த 20 நகரங்களின் அபிவிருத் திப் பணிகள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படும். பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத் துவதற்கு பாதுகாப்பு அமைச்சும் நகர அபிவிருத்தி அமைச்சும் தீர்மானித்திருப்பதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பொதுமக்களின் பாதுகாப்புக்காக குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து செயற்படுவதற்கும் இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடு களில் இருந்து வந்து எங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு துணை புரியும் போது அவர்களுக்கு பூரண பாதுகாப்பு அளிப்பதற் கும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு அமைச்சு கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு வருகை தந்த இலட்சக்கணக் கான வெளிநாட்டவருக்கு பூரண ஒத்து ழைப்பை வழங்கியுள்ளது.
மனிதாபிமான இராணுவ நடவடிக்கை களின் ஊடாக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட போதிலும் புலிகளை ஆதரிக்கும் வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் அமைப்புகளும் நாட்டில் மீண்டும் வன்முறைகளை தூண்டிவிடுவதற்கு முயற்சிகளை செய்து வருகின்ற அதே வேளையில் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத் தக்கூடிய பொய்யான முறைப்பாடுகளை செய்துவருவதும் இங்கு அவதானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலை குறித்து தமது அவதானத்தை செலுத்தி வரும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் முன் னேற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இத்தகைய அழுத்தங்கள் பற்றி உண்மை நிலையை சர்வதேச ரீதியில் எடுத்துரைப் பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீண்டும் நாட்டுக்குள் புகுந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வுக்கு தீங்கிழைக்கக் கூடிய, கப்பம் எடுப்பவர்கள், சிறுபிள்ளை களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்தல், போதைவஸ்து வியாபாரம், ஆள்கடத்தல், பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் போன்ற குற்றமிழைப்ப வர்களை கைது செய்வதற்கு நாடெங்கிலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்று ஐ.நா. சபையின் அமைதிப்படைகளில் பணி புரிவதற்கும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு கூடுதலான வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கும் பாதுகாப்பு செயலாளர் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.




(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE